பதிவு செய்த நாள்
28
ஜன
2019
03:01
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி மாத பிரமோற்ச வத்தை முன்னிட்டு, பந்தக்கால் முகூர்த்த விழா, நேற்று (ஜன., 27ல்) விமரிசையாக நடைபெற்றது. திருவொற்றியூரில், வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது.
பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா, 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், பிப்., 10ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு, பந்தக்கால் முகூர்த்த விழா, நேற்று (ஜன., 27ல்) காலை, கோவில் ராஜகோபுரம் முகப்பில் நடந்தது. இதில், பிரமாண்ட பந்தக் கால் மரத்திற்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புனித நீர் சேர்க்கப்பட்டது. இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.