சிதம்பரம்:சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் திருத்தல உற்சவ வரலாற்று விழா நடந்தது.அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்டர் - ரத்தினாசபை அம்மையார் சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குளத்தில் மூழ்கி இளமை பெற்றதாக வரலாறு.
அதனையொட்டி ஆண்டுதோறும் தை மாதம் இக்கோவிலில் வரலாற்று உற்சவ விழா நடப்பது வழக்கம்.இந்தாண்டு விழா கடந்த 28ம் தேதி துவங்கியது, அதனையொட்டி அன்று இரவு 7:30 மணிக்கு சுவாமி வீதியுலா, 9:00 மணிக்கு சிவபெருமான் சிவயோகியார் வடிவில் திருநீலகண்டருக்கு திருவோடு அளித்தல், 10:00 மணிக்கு சிவபுராணம் வாசித்தல் நடந்தது.தொடர்ந்து 29ம் தேதி பகல் 12:00 மணிக்கு சுவாமி வீதியுலா, 1:30 மணிக்கு புராணம் வாசித்தல், 3.00 மணிக்கு வரலாற்று உற்சவமான இளமையாக்கினார் குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து, தீர்த்தவாரியில் பங்கேற்றனர்.