பதிவு செய்த நாள்
30
ஜன
2019
02:01
ஈரோடு: ஈரோடு, கோட்டை சின்னபாவடி, பத்ர காளியம்மன் கோவில் குண்டம் விழா, வரும், பிப்., 1ல் நடக்கிறது. கடந்த, 28ல் பூச்சசாட்டுதலுடன் விழா தொடங்கியது.
தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், கருங்கல்பாளையம், ராகவேந்திரர் கோவில் காவிரிக்கரையிலிருந்து, தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். வழி நெடுகிலும் நின்ற பக்தர்கள், தீர்த்தம் எடுத்து வந்த பெண்களின் பாதங்களில் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். இன்றிரவு அக்னி கபாளம் ஏந்தி வரும் நிகழ்ச்சி, 31ம் தேதி இரவு, குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.,1ல் குண்டம் இறங்குதல் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அதை தொடர்ந்து, பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம், மாலையில் அம்மன் திருவீதியுலா நடக்கிறது.