பதிவு செய்த நாள்
30
ஜன
2019
02:01
கோபிசெட்டிபாளையம்: கோபி, புதுக்காடு வீரமாரியம்மன் கோவில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து, நேற்று ஊர்வலமாக சென்றனர்.
கோபி, பாரியூர் நஞ்ச கவுண்டம்பாளையம் கிராமம் அருகே, புதுக்காடு பகுதியில், வீரமாரியம்மன் கோவில் உள்ளது. கோவில், கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதையொட்டி, கடந்த, 27ல், பவானி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். நஞ்ச கவுண்டம்பாளையம், புதுக்காடு பகுதியை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று, முளைப்பாரியை எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின், வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், யாகசாலை பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, கும்பாபிஷேகம், இன்று காலை, 10:00 மணி முதல், 10:30 மணிக்குள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.