ஈரோடு, பள்ளிகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் போதிக்க வேண்டும், என, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோபாலராமானுஜ சுவாமி வேண்டுகோள் விடுத்தார். விஷ்ணு சகஸ்ரநாம பாராயண நிகழ்ச்சி, ஈரோட்டில் நேற்று நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் ஜீயர், சடகோபால ராமானுஜ சுவாமி, அருளாசி வழங்கி பேசியதாவது:ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தை, பள்ளி குழந்தைகளுக்கும் போதிக்க வேண்டும். இதுபோன்ற பாராயணம் உலக நன்மையை ஏற்படுத்தும்.வீட்டிலிருந்து வெளியே வரும்போதும், பள்ளிக்கு செல்லும்போதும், விபூதி, குங்குமம் இட்டு செல்ல வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும், இந்து சமதர்மத்தை போதிக்க வேண்டும்.இந்து மக்களிடம் ஒற்றுமை ஏற்பட வேண்டும். பகவான் பெருமாளுக்கு கோவில் கட்ட, அடுத்தவரின் அனுமதியை பெற வேண்டிய நிலை உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ராமர் கோவிலை விரைவில் கட்டுவோம். ராமர் கோவில் தொடர்பாக, நடிகர் கமல் கூறியிருப்பது, அவரது சொந்த கருத்தாகும்.இவ்வாறு, அவர் பேசினார்.