பதிவு செய்த நாள்
02
பிப்
2019
02:02
காரைக்கால்:திருநள்ளார், சனீஸ்வரபகவான் கோவில் கும்பாபிஷேகத்திற்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்படுகள் குறித்து டி.ஜி.பி., சுந்தரிநத்தா நேற்று (பிப்., 1ல்) ஆய்வு மேற்கொண்டார்.காரைக்கால், திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 11 ம் தேதி நடைபெற உள்ளது.
அதனையொட்டி, கும்பாபிஷேகத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளி்ப்பது குறித்து புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி., சுந்தரிநத்தா நேற்று (பிப்., 1ல்) கோவிலை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விக்ரந்தராஜா தலைமையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் சீனியர் எஸ்.பி.,மகேஷ்குமார் பன்வால், எஸ்.பி.,க்கள் மாரிமுத்து, வீரவல்லபன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.பின்னர் டி.ஜி.பி.,சுந்தரிநத்தா, நிருபர்களிடம் கூறுகையில், சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை, பக்தர்கள் சிரமமின்றி கண்டு களிக்கும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.