சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கோ பூஜை நடந்தது. பின்னர், முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் போன்ற பொருட்களை கொண்டு, அபிஷேகங்கள் நடந்தன. பின், வண்ண மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் . காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசித்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் பஸ்கள் மலை அடிவாரத்திலிருந்து, மலைக்கு இரவு வரை தொடர்ந்து இயக்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால், பக்தர்கள் நீண்ட வரிசையில், நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.