அலங்காநல்லுார்: தை அமாவாசையையொட்டி அழகர்மலை நூபுரகங்கையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி ராக்காயி அம்மனை தரிசித்தனர். சோலைமலை முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அலங்காரம், தீபாரதனைகள் நடந்தன. பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர். மலையடிவார கள்ளழகர் கோயிலில் உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.
தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலையிலிருந்து இரவு வரை பக்தர்கள் அதிகம் தரிசனம் செய்தனர். அங்குள்ள 18ம் படி கருப்பண சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மூலவர் சுந்தரராஜபெருமாளுக்கு நேற்று முதல் சாம்பிராணி தைலம் சாத்துபடி நடந்தது. இதனால் பூஜைகள், நிறைமாலைகள் உற்ஸவருக்கே செலுத்தபடும். இந்த நடைமுறை ஜுலை 31 ஆடி அமாவாசை வரை தொடரும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் செய்தனர்.