தை அமாவாசை தர்ப்பணம் செய்ய சுருளி அருவியில் குவிந்த மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2019 02:02
கம்பம்:தை அமாவாசையை ஒட்டி நேற்று (பிப்., 4ல்) சுருளி அருவியில் குவிந்த பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். தை அமாவாசையை ஒட்டி அதிகாலை முதல் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் சுருளி அருவியில் குவிந்தனர்.
அருவியில் குளித்துவிட்டு சுருளி ஆற்றங்கரையில் முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின்னர் இங்குள்ள பூதநாராயணர் கோயில், வேலப்பர் கோயில், ஆதிஅண்ணா மலையார் கோயில், கோடிலிங்கம் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை களில் பங்கேற்றனர்.
ஆதி அண்ணாமலையார் கோயிலில் அன்னதானம் நடந்தது. சிவனடியார் முருகன்சுவாமிகள் அபிஷேக ஆராதனைகள் செய்து, அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
குளிக்க தள்ளுமுள்ளு சுருளி அருவியில் தண்ணீர் வரத்து மிக குறைவாக இருந்ததால் கூட்டம் குளிப்பதற்கு முண்டியடித்தது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வனத்துறையினர் வரிசையாக அனுப்பினர். ஆற்றிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் பலரும் சிரமப்பட்டனர்.