போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த பெர்டினான்ட் மெகல்லன், பூமி உருண்டை எனஅறிவித்தார். கோப்பர்நிக்கஸ் என்ற ஆராய்ச்சியாளரும், அதன்பின் கலிலியோவும் இதை உறுதி செய்தனர். மேலும் பூமி அந்தரத்தில் தொங்குகிறது என்றும், சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகிறது என்றும் அறிவித்தனர். இது நடந்தது 15ம் நூற்றாண்டில். கி.மு.700ல் வாழ்ந்த ஏசாயா, “அவர்(கர்த்தர்) பூமியின் உருண்டையின் மேல் வீற்றிருக்கிறார்” என அறிவித்துள்ளார். கி.மு.2600ல் வாழ்ந்த யோபு, “அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார்’ என்கிறார். எல்லாவற்றையும் படைத்த தேவனே அவர்களுக்கு இதைச் சொல்லி எழுதியுள்ளனர். ஏனெனில் வேத வாக்கியங்கள் தேவ ஆவியினால் அருளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.