வெளியே புறப்படும் போது, ’ஜாக்கிரதையாகப் போய் வா’ என பெற்றோர் எச்சரிக்கை செய்வர். ஆன்மிக வாழ்விலும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன் எச்சரிக்கை விஷயங்கள் உள்ளன. * மனதை ஜாக்கிரதையாய் பாதுகாத்துக் கொள். * ஜாக்கிரதை உள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும். (முன் எச்சரிக்கை உள்ளவன் தலைவனாக இருப்பான்) * ஜாக்கிரதை உள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும். (எச்சரிக்கை கொண்டவனின் மனம் பலமானதாக இருக்கும்) * ஜாக்கிரதை உள்ளவனுடைய நினைவுகள் (திட்டங்கள்) செல்வத்தை அடைய ஏதுவாகும். * தன் வேலையில் ஜாக்கிரதையாய் இருக்கிறவன் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். (அரசிடம் பரிசு பெறுவான்)