ஜோதிர் லிங்க தலங்களுள் ஒன்றான நாசிக் த்ரயம்பகேஷ்வர் கோயிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அஞ்சநேரி மலையும் அனுமனின் அவதாரத் தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு ஒரு குகையில் அனுமனின் மாதாவான அஞ்சனையும், குழந்தை அனுமனும் அருள்புரிகின்றனர். மேலும் அங்கு அவர்களுக்கு இன்னொரு தனிக்கோயிலும் உள்ளது. அங்கு தாயின் மடியில் அனுமன் அமர்ந்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம்.