பதிவு செய்த நாள்
06
பிப்
2019
12:02
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே, அம்மன் கல் சிலை கண்டெடுக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் அடுத்த, பெரியகாட்டுப்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர், உமாபதி. இவர், நேற்று முன்தினம், வீட்டு வளாகத்தில், குழி தோண்டினார். அப்போது கிடைத்த கற்சிலையை, அவர் கண்டெடுத்தார். அழகிய சிற்ப வேலைபாடுகளுடன், 1.5 அடி உயரத்தில் இருந்த அம்மன் சிலையை, அந்த கிராம மக்கள், வந்து பார்த்தனர். இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது.