நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் ஜீவ சமாதியடைந்த சித்தருக்கு அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்த பரங்கிப்பேட்டையார் என்கிற குழந்தைவேல் சுவாமிகள், கோவிலில் உள்ள பிரணவ தீர்த்தத்தில் முக்தியடைந்து ஜல சமாதி நிலையில் இருந்தார்.
இவருக்கு மலையின் தென்மேற்கு பகுதியில் ஜீவசமாதி அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று முன்தினம் (பிப்., 4ல்) அமாவாசையை முன்னிட்டு மதியம் 1:00 மணிக்கு ஜீவசமாதியடைந்த இடத்தின் மேல் உள்ள பலிபீடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து 2:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.