பதிவு செய்த நாள்
08
பிப்
2019
11:02
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அடுத்த குட்டையூர் மாதேஸ்வரன் மலை அருகே கடந்தாண்டு புதிதாக சீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டது. இங்கு தினமும் வழிபாடுகளும், வியாழக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இக்கோவிலின் இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. காலை, 5:30 மணிக்கு கோவில் நடை திறந்து, சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தியும், அபிேஷக பூஜையும் நடந்தன. அதன் பிறகு பக்தர்கள் வழிபாட்டுக்கு விடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காலையிலிருந்து நீண்ட வரிசையிலிருந்து சாய்பாபாவை வழிபட்டனர்.விழாவை அடுத்து, காலையில் நாகசாய் பஜனையும், மாலையில் வாசுதேவன் பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்தனம் பஜனையும் நடந்தது. பின்பு சாய்பாபா பல்லக்கு ஊர்வலம் வந்தது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் இளங்கோவன், அறங்காவலர்கள் செந்தில்குமார், ராஜமாணிக்கம், சதீஸ்குமார், சுதர்சன், சம்பத், ரமேஷ், மகேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். ஆறுமுகம் அன்னதான ஏற்பாடுகளை செய்திருந்தார்.