சோமநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்: வைகையில் புனித நீர் எடுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2019 11:02
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்- சோமநாதர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 11ந் தேதி நடைபெறுவதை ஒட்டி சிவாச்சாரியார்களால் வைகையில் இருந்து புனித நீர் எடுத்து யாகசாலை பூஜைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஆனந்தவல்லி-சோமநாதர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 11 ந் தேதி காலை 9:15 மணியிலிருந்து 10:00 மணிக்குள் நடைபெற உள்ளது, கோயில் முன் யாகசாலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 4 ந் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், விக்னஷே்வர பூஜை தன பூஜையும்,5 ந் தேதி காலை 8:30 மணிக்கு புண்யாஹ வாசனம், மகா கணபதி ஹோமம், மாலை 5:00 மணிக்கு கிராம சாந்தி, பிரவேசபலி ர க்ஷோக்ன ஹோமம் நடைபெற்று வருகிறது,
7 ந்தேதி இரவு வைகை ஆற்றில் இருந்து சிவாச்சாரியார்களால் கடங்களில் புனிதநீர் எடுத்து ஊர்வலமாக யாகசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.நேற்று முன்தினம் கர்நாடக இசைக்கலைஞர்கள் மாண்டலின் சீனிவாசன், மிருதங்க கலைஞர் பிரவீன் இசைக்கச்சேரி, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.