பதிவு செய்த நாள்
11
பிப்
2019
11:02
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வர தேவஸ்தானம் சனீஸ்வர பகவான் கோவிலில் மஹா கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் மாவட்ட திருநள்ளார் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில்
ஸ்ரீ நகவிடங்க செண்பகத்தியாககேச பெருமானுக்கு அனுக்கிரக மூர்த்தியாகிய
ஸ்ரீ சனீஸ்வரபகவான் விளங்குகிறார்.
கோவிலில் நேற்று (பிப்., 10ல்) மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலத் திலிருந்து பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநள்ளார் தர்பாரண்யேஸ்வர,சனீஸ்வரபகவான் கோவில் உலகப் புகழ்வாய்ந்த கோவிலாக உள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் சனிக்கிழமை மற்றும் பல்வேறு நாட்களில் பல்லாயிரக் காணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர். இத்திருத்தலம் நான்கு யுகங்களிளும் முறையே ஆதிபுரீச்சரம், தர்பாரண்யேச்சரம், நகவிடங்கேச்சரம், நளேச்சரம் எனும் பெயர்களோடு புராணச்சிறப்புடையது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரமூர்த்தி ஆகியம் மூவரும் தேவாரப்பதிகம் பாடிய திருத்தலாகும். திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவில் பழங்கால கருங்கல் கட்டுமானங் களை கலைதோற்றத்துடன் அமைக்கப்பட்டது.இக்கோவிலில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7ம் தேதி முதல்கால யாகசாலைபூஜை தொடங்கியது.
இன்று(11ம் தேதி காலை எட்டாம் காலயாகபூஜை முடிந்து பிறதான கும்பமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.பின்.காலை 9.10 முதல் 10.10க்கு எழுநிலை மாடங்களோடு ஓங்கிநிற்கும் ராஜ கோபுரம்,தர்பாரண்யேஸ்வர்,சனிஸ்வரபகவான்,அம்பாள்,விநாயகர், முருகன் மற்றும் கோவிலை நுழைவுவாயில் உள்ள மூன்று நிலை கோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.இதில் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வருகைப்புரிந்தார். முன்னாக அனைவரையும் கலெக்டர் விக்ரந்தராஜா வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன்,சமுகநலத்துறை அமைச்சர் கந்தசாமி,இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் சுதாகர், ஆதினம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,தருமை ஆதீனம் 26 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞான சம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள்,இளைய சந்திதானம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த சுவாமிகள் உள்ளிட்ட பலர் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.