பதிவு செய்த நாள்
11
பிப்
2019
12:02
நாகர்கோவில்: பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், கலசாபிஷேகம், கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோவிலுக்கு, பெண்கள் இருமுடி கட்டுடன் வந்து தரிசனம் செய்வர். திருவிதாங்கூர் மன்னர் காலத்தில், கோவில் அமைக்கப்பட்டது. பின், மூலஸ்தானத்தில் திருப்பணிகள் நடக்கவில்லை.மூன்று ஆண்டுகளுக்கு முன், திருப்பணிகள் தொடங்கின. ராஜகோபுரம், புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. 2.70 கோடி ரூபாயில் பணிகள் நடந்தன. மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று (பிப்., 10ல்), கும்பாபிஷேகம், மூலஸ்தானத்தக்கு கலசாபிஷேகம் நடந்தது.