பதிவு செய்த நாள்
11
பிப்
2019
01:02
கடலூர்: பிள்ளையார்மேடு பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலூர், குடிகாடு அடுத்த பிள்ளையார்மேடு பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி கடந்த 8ம் தேதி, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, விக்னேஸ் வர பூஜை, வாஸ்து சாந்தி, வேத பாராயணம், முதல் கால பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் (பிப்., 9ல்) இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜைகள், சுமங்கலி பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மாணவியரின் பரதநாட்டியம் நடந்தது.நேற்று (பிப்., 10ல்) காலை நாடிசந்தானம், தத்வார்ச்னை, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்., பொதுச் செயலர் விநாயகம், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த குலதெய்வம் வழிபடுவோர், முன்னாள் சேர்மன் முருகேசன், அரிசி வியாபாரி சிங்காரவேலு, விக்னேஷ் மகால் கனகசபை, பண்ருட்டி முரளி மளிகை சண்முகம், முரளி ஆயில் மில்ஸ் சுந்தர், எம்.ஜி.ராய் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆர்க்கிடெக் பாரதி, தே.மு.தி.க., மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், சோமசுந்தரம், பச்சையப்பா டைல்ஸ் தெய்வசிகாமணி, வக்கீல்கள் ஜெயபால், ஜெயக்குமார் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தினமலர்நாளிதழ் மற்றும் சூப்பர் ருசி பால் சார்பில், வழுவழு தாளில் பச்சைவாழியம்மன் படம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைகளை மோகனசுந்தர சிவம், பாடலீஸ்வரர் கோவில் தலைமை அர்ச்சகர் சிவா குருக்கள் மற்றும் 50 சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராமவாசிகள், குலதெய்வம் வழிபடுவோர் மற்றும் மாவட்ட தி.மு.க., நெசவாளர் அணி துணை அமைப்பாளரும், கோவில் பூசாரியுமான பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதி துரை, பூசாரிகள் பச்சையப்பன், முருகேசன், சுப்ரமணியன், ராமலிங்கம் செய்திருந்தனர்.