பதிவு செய்த நாள்
11
பிப்
2019
03:02
சோழவந்தான்:சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஸ்ரீராம்சுப்ரமணியன் பட்டர் தலைமையில் பிப்., 9 கணபதி ஹோமம் முதல் கால பூஜை, நேற்று பிப்., 10, காலை இரண்டாம் கால பூஜை நடந்தன. பின் சிவாச்சார்யார்கள் புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.
பேரையூர் பேரையூர் தாலுகா டி.குண்ணத்தூர் நாராயணன்செட்டியார் தர்மமடத்திற்கு சொந்தமான ஆதிமூல மடத்து விநாயகர்கோயில் கும்பாபிஷேகம் நேற்று (பிப்., 10ல்) நடந்தது.
இதையொட்டி பிப்., 8, 9 கோ பூஜை, விக்னேஷ்வர பூஜை, முதல், இரண்டாம் காலயாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று (பிப்., 10ல்) காலை புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்றி வெங்கடேஷ்சிவம் பட்டர் தலைமையில் ஹரிசங்கர்சிவம், விஸ்வநாதபட்டர் கும்பாபிஷேகம் நடத்தினர். விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.