பதிவு செய்த நாள்
11
பிப்
2019
03:02
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே காலனி நாக கன்னி அம்மன் கோவிலில், ராகு -- கேது பெயர்ச்சி விழா வரும், 13ம் தேதி நடக்கிறது.பொள்ளாச்சி ரயில்வே காலனியில் உள்ள பவுர்ணமி நாக கன்னி அம்மன் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சி, மூன்றாம் ஆண்டு விழா வரும், 13ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி காலை, 10:00 முதல், விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், ராகு, கேது கலச ஆவாஹணம், பரிகார ஹோமங்கள், அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. பரிகார ராசிக்காரர்கள், பரிகாரம் செய்து வழிபாடு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.