பதிவு செய்த நாள்
11
பிப்
2019
03:02
உடுமலை: உடுமலை, சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று (பிப்., 10ல்) துவங்கியது.
உடுமலை, நெல்லுக்கடை வீதி, சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், தை மாதம் ரத சப்தமியையொட்டி, பூமீ நீளா நாயகி சமேத சவுந்திரராஜ பெருமாளுக்கு, விஷ்ணு சகஸ்ரநாம லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது.
உற்சவம், நேற்று (பிப்., 10) முதல் நாளை 12ம்தேதி வரை நடக்கிறது. நேற்று (பிப்., 10), பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும், இரவு, 7:00 மணிக்கு ஹோமமும் நடந்தன.இன்று (பிப்., 11ல்), காலை, 10:00 மணிக்கு, பஞ்சோபநிஷத் மூலமந்தர ஹோமம் , மதியம் தீபாராதனை நடக்கிறது.
இரவு, தத்வந்யாஷ ஹோமமும், நாளை (பிப்., 12ல்), காலை, 8:00 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு பூஜையும் நடக்கின்றன.