பதிவு செய்த நாள்
11
பிப்
2019
03:02
சூலூர்:கண்ணம்பாளையம் சாரதாம்பாள் நகர், வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட சாரதாம்பாள் மற்றும் ஐஸ்வர்யா நகர் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவிலில், சமீபத்தில் திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேக
விழா, நேற்று முன்தினம் (பிப்., 9ல்) காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கின.
மாலை, வாஸ்துபூஜை மற்றும் மாகாளியம்மன் கோவிலில் இருந்து சீர் வரிசை எடுத்து வருதலும் நடந்தன. தொடர்ந்து, முதல் கால ஹோமம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி நடந்தன. விநாயகப்பெருமானுக்கு இரவு அஷ்டபந்தன மருந்திடப்பட்டது. நேற்று (பிப்., 10ல்) காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமம் நடந்தது. நாடி சந்தானம், திருமுறை விண்ணப்பத்துக்கு பிறகு, பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 9:35 மணிக்கு விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் நடந்தது. விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். அன்னதானம் நடந்தது.