பதிவு செய்த நாள்
11
பிப்
2019
03:02
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே நடந்த, அரியநாச்சிபாளையம் சிலம்பாயம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் அருகே அரிய நாச்சிபாளையத்தில் உள்ள சிலம்பாயம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்றுமுன்தினம் (பிப்., 9ல்) காலை அமராவதி ஆற்றுக்குச்சென்று தீர்த்தம் எடுத்து வருதலுடன் தொடங்கியது.
அன்று மாலை, 6:00 மணிக்கு, மங்கள இசை, கணபதிபூஜை, முதற்காலயாக பூஜை நடந்தது. நேற்று (பிப்., 10ல்) காலை 8:30 மணிக்கு மேல் 9:30 மணிக்குள் விநாயகர், சிவகாமியம்மன்,
முருகர், சிலம்பாயம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.