பதிவு செய்த நாள்
11
பிப்
2019
04:02
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, அம்மனுக்கு முட்டையிடாத கோழி, பனங்கருப்பட்டியை வைத்து வழிபடும் வினோத நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே புதுப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற ஒட்டச்சாயி அம்மன் கோவில் உள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்பு, நிறைமாத கர்ப்பிணி அவ்வழியே
செல்லும்போது எதிர்பாராதவிதமாக பிரசவம் ஆனது. அப்போது இறக்கும் தருவாயில் இருந்த பெண், எனது குழந்தையை ஊர்மக்கள் காப்பாற்ற வேண்டும்; இந்த பகுதியில் அம்மனுக்கு
கோவில் கட்டி ஆண்டுதோறும் முட்டையிடாத கோழி மற்றும் பிரவசத்திற்கு பின், பயன்படும் பனங்கருப்பட்டியை கொண்டு தைமாதம் பூஜை நடத்தவேண்டும் என கூறி விட்டு இறந்தார்.
அன்றிலிருந்து இன்று வரை, இப்பகுதி மக்கள் அந்த பெண் கூறியதை போல விழா நடத்தி வருகின்றனர். தை மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை வினோத வழிபாடு நடத்தப்படுகிறது. நேற்று (பிப்., 10ல்)காலை இப்பகுதி மக்கள், முட்டையிடாத கோழிகள் மற்றும் பனங்கருப்பட்டியை கொண்டு வந்து ஒட்டச்சாயி அம்மனுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்தனர். ராசிபுரம், வடுகம், புதுபட்டி, மலையாம்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பலர்
கலந்துகொண்டனர்.