பதிவு செய்த நாள்
11
பிப்
2019
05:02
செங்கல்பட்டு:கடம்பூர், கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று
(பிப்., 10ல்)நடைபெற்றது. மறைமலைநகர் அடுத்த, கடம்பூர் கிராமத்தில், விஜிலன்ஸ் நகரில், பாலாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவில், பல ஆண்டுகளாக, பழுதடைந்து இருந்தது.அதன் பின், 2012ம் ஆண்டு, கோவில் திருப்பணியை துவங்கி, சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது.அதைத் தொடர்ந்து, 6ம் தேதி, விநாயகர் பூஜை உட்பட பல்வேறு பூஜைகளுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது.
நேற்று (பிப்., 10ல்) காலை 9:30 மணிக்கு, கலசங்கள் புறப்பட்டு, கோபுரங்களுக்கு சென்றது. காலை, 10:00 மணிக்கு, அனைத்து கோபுரங்களுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா
நடைபெற்றது. அதன் பின், பாலாம்பிகை, கைலாசநாதருக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.விழாவில், காவல்துறை முன்னாள் இயக்குனர் ராதாகிருஷ்ணன், டி.ஐ.ஜி., தேன்மொழி, எஸ்.பி., சந்தோஷ், லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள், டி.எஸ்.பி., சம்பந்தம்
உட்பட 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.திருக்கழுக்குன்றம் சிவதாமோதரன், திருவாசகம் சொற்பொழிவு ஆற்றினார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, திருவாசகம் படித்தனர்.