பதிவு செய்த நாள்
11
பிப்
2019
05:02
திருமால்பூர்:திருமால்பூர், மணிகண்டீஸ்வரர் கோவிலில், பிரம்மோற்சவ விழா, கோலாகலமாக கொடியேற்றத்துடன், நேற்று, (பிப்., 10ல்)துவங்கியது.
காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் கிராமத்தில், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, மாசி மாத பிரம்மோற்சவம், நேற்று காலை, 5:30 மணிக்கு,
கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.இரவு, சிம்ம வாகனத்தில், அஞ்சனாட்சி அம்பாளுடன், மணிகண்டீஸ்வரர் வீதியுலா வந்தார். பிரம்மோற்சவத்தின் பிரதான தேரோட்டம், 19ம் தேதி நடைபெற உள்ளது.