பதிவு செய்த நாள்
12
பிப்
2019
03:02
காஞ்சிபுரம்: ஓரிக்கை, குபேர விநாயகர் கோவிலில், புதிதாக கட்டப்பட்ட ஷீரடி சாய்பாபா மற்றும் காலபைரவர் சன்னிதி கும்பாபிஷேகம் நேற்று (பிப்., 11ல்) நடந்தது.
ஓரிக்கையில் குபேர விநாயகர் கோவில் உள்ளது. இவ்வளாகத்தில், பகவதி புவனஷேவரியம் மன், தேவி கருமாரியம்மன், ராகு, கேது, அய்யப்பன், பாலமுருகன் மற்றும் நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னிதி உள்ளது.தற்போது, ஷீரடி சாய்பாபா மற்றும் காலபைரவர் சன்னிதி புதிதாக கட்டப்பட்டது. இருசன்னிதிகளின், கும்பாபிஷேகத்தையொட்டி, பிப்., 9ல், மஹா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.
கும்பாபிஷேக தினமான நேற்று (பிப்., 11ல்), காலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி நடந்தது. காலை, 8:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஓரிக்கை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.