முத்துக்குமரன் விரும்பி உறையும் சென்னை கந்தசாமி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பகுதி சிந்தாதிரிப்பேட்டை, இப்பகுதியில் ஐயா முதலி தெருவில் (மார்க்கெட் பின்புறம்) அமைந்துள்ள முருகவேள் திருக்கோயிலில், அடியார்களின் வேண்டுகோளுக்கிணங்க, "ஞானவேல் ஒன்றை ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஞானவேலுக்குத் திருநீறு (விபூதி) அபிஷேகம் செய்யப்பட்டு, அடியார்களுக்கு அருள்பிரசாதமாக வழங்கப்படுகிறது. அந்த ஞானவேல் பிரசாதம், அன்பர்களது மனக் கவலைகளை நீக்கி, நோய் தீர்த்து, மகிழ்ச்சியை அளிக்கும் என்பது நம்பிக்கை. அத்துடன், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் திருக்கரங்களால் கடம்ப மரக்கன்று ஒன்று நடப்பட்டதாகவும் அறிய முடிகிறது. கடம்ப மலர் முருகனுக்கு உகந்த மலர் அல்லவா?! கிருபானந்தவாரியாரும் போற்றிப்பரவிய திருக்கோயில் இது.