விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.10 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2019 04:02
விருத்தாசலம்:விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று (பிப்., 10ல்) உதவி ஆணையர் ரேணுகாதேவி தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. 7 காணிக்கை உண்டியல்கள் பிரித்து, ஆய்வாளர் லட்சுமி நாராயணன், செயல் அலுவலர் முத்துராஜா, பணியாளர்கள் கோவிந்தராஜ், பார்த்தசாரதி, மகளிர் சுய உதவிக் குழு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் காணிக்கைகளை எண்ணினர். அதில், 10 லட்சத்து 333 ரூபாய் பணம், 23 கிராம் தங்கம், 35 கிராம் வெள்ளி ஆகியன இருந்தன.