பதிவு செய்த நாள்
14
பிப்
2019
01:02
சிதம்பரம்: ராகு, கேது பெயர்ச்சியையொட்டி அனந்தீஸ்வரர் கோவில் நவக்கிரக சன்னதியில் நடந்த பரிகார சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.கடக ராசியில் இருந்து மிதுனம் ராசியில் ராகும், மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கு கேதுவும் பின்நோக்கி இடப்பெயர்ச்சி நேற்று (பிப்., 13ல்)நடந்தது. இதனையொட்டி சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் சவுந்திரநாயகி சமேத அனந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து நவக்கிரக சன்னதி அருகில் சிறப்பு ஹோமம் நடைப்பெற்று, ராகு, கேது கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் 2.05 மணிக்கு பெயற்சி அடைந்ததையொட்டி ராகு, கேது கிரகத்திற்கு பரிகார பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் ராகு, கேது கிரகத்திற்கு அர்ச்சனை செய்து பரிகார பலன் செய்தனர்.
அதேபோல், நடராஜர் கோவிலில் உள்ள நவக்கிர சன்னதியில் ராகு, கேது சிறப்பு ஹோமங்கள் நடைப்பெற்று, ராகு, கேது கிரகத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.