பதிவு செய்த நாள்
18
பிப்
2019
05:02
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், மாசி மாத பிரதோஷ நாளையொட்டி அக்ரஹாரம் காசிவிஸ்வேஸ்வரர் கோவிலில் சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலிக்க, பக்தர்கள் சுவாமிகளை பல்லக்கில் சுமந்தவாறு கோவிலை வலம் வந்தனர். இதேபோல் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், கோட்டைமேடு
சிவபெருமான் கோவில், சவுண்டம்மன் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.