பதிவு செய்த நாள்
18
பிப்
2019
05:02
நாமகிரிப்பேட்டை: நாரைக்கிணற்றில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (பிப்., 17ல்)நடந்தது.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், நாரைக்கிணறு ஊராட்சியில் பிரசித்தி பெற்ற செல்வ கணபதி, மாரியம்மன், செல்லியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
கோவில் புனரமைக்கும் பணி கடந்த, 18 ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்நிலையில் விழா குழுவினர் கும்பாபிஷேக விழாவை நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக கடந்த, 15ல், காலை, 7:00 மணிக்கு பெரிய கிணற்றில் இருந்து சுவாமி சிலை
விக்ரகம், கோபுர கலசம், தீர்த்த கலசம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 16ல் யாகசாலை பிரவேசம், கோபுரத்திற்கு தானியம் கொட்டுதல், கோபுரம் கலசம் வைத்தல் ஆகியவை நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு வேதபாராயணம், செல்வ கணபதி ஹோமம், மூர்த்தி ஹோமம், நாடிசந்தானம் ஆகியவை நடந்தது. 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பட்டாச்சாரியர்கள் கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.