கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை 5 மணி அளவில் மூலவர் ராமநாதீஸ்வரருக்கும்,நந்தித் தேவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து, பிரதோஷ மூர்த்தி சுவாமிகள் கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன்,அர்ச்சகர் பாலகிருஷ்ணன்,ஓதுவார்கள் பழனியாண்டி,கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.