மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.ஆலகிராமத்திலுள்ள திரிபுர சுந்தரி சமதே எமதண்டீஸ்வரர் கோவிலில் நேற்று (பிப்., 17ல்) பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு கோவில் மூலவருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பிரதோஷ விழா ஏற்பாடுகளை குருக்கள் சுந்தரமூர்த்தி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.இதேபோல், மயிலம் சுந்தர விநாயகர் கோவிலிலும், பெரும்பாக்கம், தென்பசியார், நெடி, பாதிராப்புலியூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்ட வழிபாடு நடந்தது.