Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நோய் தீர்க்கும் மாமருந்து நீராடத் தயாராகி விட்டீர்களா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மாசிமகத்தன்று விளக்கு எடுக்க வாங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2019
04:02

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில் மாசிமகத்தன்று தெப்பத் திருவிழா நடக்கிறது.  பக்தர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேற குளக்கரையில் ஏற்றும் விளக்குகளை எடுத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர். பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். இதனால் அவனது அட்டூழியம் அதிகரித்தது. அவனை அழிப்பதற்காக பூலோகத்தில் கதம்ப மகரிஷியின் ஆஸ்ரமத்தில் தேவர்கள் ஆலோசித்தனர். அந்தக் கூட்டத்திற்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் தலைமையில் சப்தரிஷிகள் கோஷ்டியாக வந்தனர். இதனால் இத்தலம் ’திருக்கோஷ்டியூர்’ எனப் பெயர் பெற்றது. இங்கு சவுமிய நாராயணப் பெருமாள் என்ற பெயரில் மகாவிஷ்ணு அருள்பாலிக்கிறார்.  

விருப்பம் நிறைவேற தெப்பத் திருவிழாவன்று இங்கு குளக்கரையில் ஏற்றிய அகல் விளக்கை, வீட்டுக்கு எடுத்து வர வேண்டும். கோரிக்கை நிறைவேறிய பின், அத்துடன் புதிய அகல் ஒன்று வாங்கி அடுத்த ஆண்டு மாசிமகத்தன்று குளக்கரையில் ஏற்ற வேண்டும். இந்த இரண்டு விளக்குகளை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வர்.  நமக்கு கிடைத்த நன்மை பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே விழாவின் நோக்கம். இந்த ஊரில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற வந்தார் ராமானுஜர். ’யார் நீ?’ என்று நம்பி கேட்க, ’நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்றார். வீட்டுக்குள் இருந்தபடியே, ’நான் செத்த பின் வா!’ என்றார் நம்பி. புரியாத  ராமானுஜர் அங்கிருந்து  புறப்பட்டார். இப்படி 17 முறை இந்நிலை தொடர்ந்தது. 18வது முறை ’அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்’ என்று சொல்ல, நம்பி அவரை சீடராக ஏற்று ’ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தை  உபதேசித்ததுடன், ’ராமானுஜா இதை நீ மட்டும் சொன்னால் சொர்க்கம் கிடைக்கும். பிறரிடம் சொன்னால் நரகம் செல்வாய்’ என்று எச்சரித்தார். இருந்தாலும் ராமானுஜர் கோயில் விமானத்தின் மீதேறி மந்திரத்தை ஊரறியச் சொன்னார். குருநாதரரான நம்பி கண்டித்தார்.

’குருவே! நான் ஒருவன் நரகம் போனாலும் இந்த ஊர் மக்கள் சொர்க்கம் போவார்களே!’ என்றார் ராமானுஜர். இதனடிப்படையில் விமானத்தின் மீது ராமானுஜர் சிலை உள்ளது.   கருவறையில்  மூலவர் சவுமிய நாராயணருடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன். மது, கைடபர் என்னும் அரக்கர்கள், இந்திரன், புரூருப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, சந்தான கிருஷ்ணர், பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி காட்சி தருகின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar