கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்கசுவாமிகள் மடத்தில், சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு திரவியங்கள், தீர்த்தாபிஷேகம் நடந்தது. கந்த குரு கசவ பாராயணத்துடன், மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் நடந்தது. கன்னிவாடி அருகே தோணிமலை முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், வள்ளி, தெய்வானை சமேத மூலவர், சதுர்முக முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.