பதிவு செய்த நாள்
27
பிப்
2019
01:02
திண்டுக்கல் : திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டி காளியம்மன், பகவதியம்மன் கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு பூஜை நடந்தது.அம்பாள், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. சுந்தர் தொகுத்து வழங்கினார்.கணித ஆசிரியர் வீரக்குமார், வரலாறு ஆசிரியர் வாசவி ஆகியோர் தேர்வை எதிர்க்கொள்ளும் முறை, அதிக மதிப்பெண் பெறுவது எப்படி, தேர்வு காலத்தில் எடுத்து கொள்ள வேண்டிய உணவு முறைகள், உடல் ஆரோக்கியத்தை பேணுதல் குறித்து ஆலோசனை வழங்கினார். குருசாமி பால்பாண்டியன்சாமி, பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது. முனியாண்டி நன்றி கூறினார்.