பதிவு செய்த நாள்
28
பிப்
2019
02:02
நாமக்கல்: நாமக்கல் அடுத்த, மாவுரெட்டிப்பட்டி, வடுகபாளையத்தில், ராஜகணபதி, ஆதிதேவி கண்டெடுத்த கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. அடுத்து, கும்பாபிஷேகம், வரும், 3ல் நடக்கிறது. கடந்த, 24ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நாளை (மார்ச்., 1ல்) காலை, 11:00 மணிக்கு, கிராமசாந்தி, மறுநாள் அதிகாலை, 4:00 மணிக்கு, கணபதி, மகாலட்சுமி, சரஸ்வதி ஹோமம், பிரசாதம் வழங்குதல். காலை, 9:00 மணிக்கு, குமார சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து முளைப்பாரி, தீர்த்தம் எடுத்துவர செல்லுதல், மதியம், 2:00 மணிக்கு, முளைப்பாரி, தீர்த்தக்குடம் அழைத்து வரப்படுகிறது.
மாலை, 4:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கும்பலங்காரம், முதற்கால யாகம், பூர்ணாகுதி, தீபாராதனை, இரவு, 9:00 மணிக்கு, கோபுர கலசம் வைத்தல், கண் திறப்பு, 11:00 மணிக்கு, சுவாமி பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச், 3 அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காம் கால யாகம், நாடி சந்தானம், மூலமந்திர ஹோமம், மகா தீபாராதனை, காலை, 6:00 மணிக்கு, கலசங்கம் புறப்பாடு, 8:05 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது.