பதிவு செய்த நாள்
01
மார்
2019
12:03
சென்னிமலை: மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னிமலையை அடுத்த, சொக்கநாதபாளையத்தில் சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த மாதம், 13ல் பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் (பிப்., 27ல்), மாவிளக்கு எடுத்து, பெண்கள் ஊர்வலமாக வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவம் நேற்று (பிப்., 28ல்) நடந்தது.
சொக்கநாதபாளையம், எல்லைக்குமாரபாளையம், ராமலிங்கபுரம், மறவபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், ஆடு, கோழி பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவில் நடந்த நிகழ்ச்சியில், கம்பம் எடுக்கப்பட்டு, நொய்யல் ஆற்றில் விடப்பட்டது.