கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும்பெண் காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.
பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவுஆயினனே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும் வேயன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர்தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே.
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவிஎண்ணில் வரும் இயமானன், இகபரமும் வண்திசையும் பெண்ணினொடு ஆண் பெருமையோடு சிறுமையும், ஆம் பேராளன்விண்ணவர் கோன் வழிபட, வெண்காடு இடமா விரும்பினேனே.
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவில்மடல் விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகு என்று தடம் மண்டு துறைக்கெண்டை, தாமரையின் பூமறையக்கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.
தண்மதியும் வெய்யுரவும் தாங்கினான், சடையின் உடன்ஒண்மதிய நுதல் உமை ஓர் கூறு உகந்தான்; உறைகோயில்பண்மொழியால் அவன் நாமம் பல ஓதப் பசுங்கிள்ளைவெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.
சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்அக்கு அரை மேல் அசைந்தானும் அடைந்து அயிரா வதம்பணிய மிக்க அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும்முக்குளம் நன்கு உடையானும் முக்கண்உடை இறையவனே.
பண்மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலையெடுத்தஉன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள்செய்தான் உறைகோயில் கண்மொய்த்த கரு மஞ்ஞை நடம்ஆட, கடல் முழங்கவிண்மொய்த்த பொழில் விரிவண்டு இசைமுரலும் வெண்காடே.
கள்ஆர் செங்கமலத்தான் கடல்கிடந்தான் என இவர்கள்ஒள்ளாண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வரியான்; வெள்ளானை தவம்செய்யும் மேதகு வெண்காட்டான் என்றுஉள்ஆடி உருகாதார் உணர்வுடமை உணரோமே.
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழிபொருள் என்னும்பேதையர்கள் அவர்; பிரிமின்; அறிவுடையீர், இது கேள்மின்; வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திருவெண்காட்டான் என்றுஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே.
தண்பொழில் சூழ் சண்பையர் கோன், தமிழ்ஞான சம்பந்தன்விண்பொழி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்பண்பொலி செந்தமிழ் மாலை பாடியபத்து இவை வல்லார்மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான்பொலியப் புகுவாரே.