சூரிய உதயம் ஆகியும் கூட, யார் ஒருவர் எழவில்லையோ, அவரது வீட்டில் வறுமை தாண்டவமாடும் என்கிறார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். சூரியன் உதித்து விட்டால், நபிகள் நாயகம் அவர்கள் எழுந்து விடுவார்கள்.
“காலை பஜ்ரு (தொழுகை) நேரம் தூங்கிக் கொண்டிருப்பது வாழ்க்கையில் தரித்திரியத்தை (ஏழ்மையை) உண்டாக்கும்,” என்று கூறும் அவர்கள் காலை நேரத்தின் சிறப்பையும் எடுத்துச் சொல்கிறார்கள்.ஒரு சமயம் அவர்கள் “எனது உம்மத்தினருக்கு (பின்பற்றுவோர்) பரக்கத்தான (சிறப்பான) ஒரு நேரம் உள்ளது. இந்த நேரத்தில் அபிவிருத்தி ஏற்படுகின்றது,” என்றார்கள். இதுகுறித்து அண்ணலாரிடம் ஒருவர், “அது எந்த நேரம்?” என்றார்கள். “காலை பஜ்ர் நேரம் தொழுகை தொடக்கத்தில் இருந்து கதிரவன் உதிக்கும் நேரம் வரை,” என அவர்கள் பதிலளித்தார்கள்.காலையில் விரைவில் எழுந்து பஜ்ர் தொழுகைக்கு செல்வதை அவசியக் கடமையாகக் கொண்டிருங்கள்.