பதிவு செய்த நாள்
06
மார்
2019
12:03
அன்னுார்:அன்னுார் அங்காளபரமேஸ்வரி கோவில் அக்னி குண்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறங்கி வழிபாடு செய்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு, அங்காளபரமேஸ்வரி கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 1ம் தேதி கலச பூஜையுடன் துவங்கியது.
2ம் தேதி மயான பூஜையும், 3ம் தேதி அம்மன் அழைத்தலும், 4ம் தேதி மாலையில் அம்மன் ஊர்வலமும் நடந்தது. நேற்று அதிகாலையில், அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. காலை 5:30 மணிக்கு குண்டம் இறங்குதல் துவங்கியது. பெண்கள், முதியோர், இளைஞர்கள் என, 100க்கும் மேற்பட்டவர்கள், கையில் வேப்பிலையுடன் குண்டத்தில் இறங்கி, அம்மனை வழிப்பட்டனர். பின்னர், அபிஷேக பூஜை, பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடந்தது. பல ஆண்டுகளுக்கு பின், குண்டம் திருவிழா நடந்ததால், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.