Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சீரடி சாய்பாபா கோவிலில் 1,536 அறைகள் கொண்ட பல அடுக்கு ஆசிரமம்! சீரடி சாய்பாபா கோவிலில் 1,536 அறைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 மார்
2012
12:03

பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் கிரகத்தை, பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம் என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயலர் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறினார். அவர் கூறியதாவது : சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் செவ்வாய் கிரகம், வரும் 3ம் தேதி நள்ளிரவு, 1.40 மணிக்கு, பூமிக்கு, 10.08 கோடி கி.மீ., தொலைவில் வருகிறது. இத்தொலைவு, 5.5 கோடி கி.மீ.,க்கும், 38 கோடி கி.மீ.,க்கும் இடையே வேறுபடும். 26 மாதங்களுக்கு ஒரு முறை வரும் இந்த நிகழ்வின் போது, இரவு நேரத்தில், வானத்தின் கிழக்கு திசையில், சிவப்பு நிறத்தில், செவ்வாய் கிரகம் தெரியும். இதை பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம். நாளை முதல், 4ம் தேதி வரை, இரவு 7 மணி முதல், 9 மணி வரை, இந்த நிகழ்வை பொதுமக்கள் தொலை நோக்கியில் காண, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கம், சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கு முன், 2003 ஆக., 27ம் தேதி, செவ்வாய் கிரகம், பூமிக்கு, 5.5 கோடி கி.மீ., தொலைவிலும், 2010 ஜன., 29ம் தேதி, 9.95 கோடி கி.மீ., தொலைவிலும் வந்தது. இவ்வாறு அய்யம்பெருமாள் கூறினார்.

ஆன்மீகத்தில் செவ்வாய்: பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை பூமியின் மகனாக கூறுவார்கள்.   பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அங்காரகன் ஆச்ரயாமி என்று செவ்வாயைப் போற்றுகிறார். நலத்தைத் தருபவனே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! எளியவர்களைக் காப்பவனே! என்றும் பாடுகிறார்.

தற்போது பூமிக்கு அருகில் வந்திருக்க கூடிய செவ்வாயை மார்ச் 2 முதல் 4ம் தேதி வரை இரவு 7 முதல் 9 மணிவரை வானத்தில் வெறும் கண்ணால் நாம்  பார்க்கலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் இந்த நாட்களில் செவ்வாயை வழிபாடு செய்வது சிறந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி; செப்டம்பர் 07-ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை கோவில் வாசல்கள் செப்.,07ம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; காணை கிராமத்தில் நவதானியங்களால் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைத்து பொதுமக்கள் வழி ... மேலும்
 
temple news
கூடலூர்; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி ... மேலும்
 
temple news
குருவாயூர்; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar