பதிவு செய்த நாள்
08
மார்
2019
02:03
கோட்டூர்:கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவிலில் நடப்பாண்டுக்கான குண்டம் திருவிழா இன்று, (8ம் தேதி) காலை, 10:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்வுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 13ம் தேதி காலை, மாவிளக்கு எடுத்தல், மாலை பூவோடு எடுத்தல்; 14ம் தேதி மதியம், அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.15ம் தேதி காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல்; 16ம் தேதி காலை, தேர் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல் இரவு, வாண வேடிக்கை நடக்கிறது.