பதிவு செய்த நாள்
08
மார்
2019
02:03
பல்லடம்:பல்லடம் ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், 44வது குண்டம் திருவிழா, திருவீதி உலாவுடன் நேற்று (மார்ச்., 7ல்) நிறைவு பெற்றது.
பல்லடத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், 44வது குண்டம் திருவிழா, கடந்த, 4ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் (மார்ச்., 6ல்), ஆயிரக்கணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.நிறைவு நாளான நேற்று (மார்ச்., 7ல்) காலை, கொடி இறக்குதல், மஹா அபிஷகேம், மஞ்சள் நீராடல், வசந்த விழா, மற்றும் பேச்சியம்மன் பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.