திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேர் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2019 02:03
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற் கான தேர் முகூர்த்தம் நடந்தது.நேற்று (மார்ச்., 7ல்) காலையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி முன்பு திருவிழா பத்திரிக்கை வைத்து பூஜைகள் முடிந்து தேங்காய் தொடும் முகூர்த்தம் நடந்தது.
கோயில் முன்புள்ள பெரிய வைரத்தேர் அலங்கரிக்கும் பணி துவங்கவுள்ளது. அதற்காக நேற்று (மார்ச்., 7ல்) தேரில் எழுந்தருளியுள்ள தராசு முருகனுக்கு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனை கள் முடிந்து தேர் முகூர்த்தம் நடந்தது. பேஷ்கார்கள் செழியன், மணியம் புகழேந்தி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.