மேலூர்: மேலூர் அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளலூர் மந்தையில் அம்பலக்காரர்கள் தலைமையில் இன்று (மார்ச் 8) பாரதம் படித்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
மார்ச் 21ல் மஞ்சுவிரட்டும், மாலையில் பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடி காரருக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. மார்ச் 22ல் மதியம் கோயிலில் கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு வெள்ளி ரதத்தில் சுவாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்ச் 23ல் தேர் திருவிழா, மார்ச் 24ல் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.