கச்சிராயபாளையம் அங்காளம்மன் கோவிலில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2019 01:03
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. கடந்த 1ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா துவங்கியது. தொடர்ந்து தினமும், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனையும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. முக்கிய விழாவான தீ மிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.