பதிவு செய்த நாள்
11
மார்
2019
11:03
வடபழனி: வடபழனி முருகன் கோவிலில், தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, சத்ய சாய் சேவா சங்கத்தினர், கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
வடபழனி முருகன் கோவிலில், வரும், 22, 23, 24 ஆகிய தேதிகளில், தெப்பத் திருவிழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, சத்ய சாய் சேவா சங்கத்தினர், கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதில், சில நாட்களாக,கோவில் உட்புறம் சுத்தம் செய்யப்பட்டது.நேற்று காலை, 200க்கும் மேற்பட்ட சத்ய சாய் சேவா சங்கத்தினர், கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில், குளத்தில் இருந்த குப்பைகளை அகற்றி, படிகளை சீர் செய்ததுடன், குளத்தை துார் வாரினர்.